ஆட்குறைப்பு மேற்கொண்டால் மனித வள அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் - சிங்கப்பூர்
நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தால் அந்த தகவலை மனிதவள அமைச்சகத்திடம் தெரியப்படுத்துவது கட்டாயம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள் 6 மாத இடைவெளியில் 5 க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது மட்டுமே மனிதவள அமைச்சகத்திடம் அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
குறைந்தது 10 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களும் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஆள் குறைப்பு குறித்து ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் அந்த தகவலை சிங்கப்பூர் மனிதவள அமைச்சிற்கு அறிவிக்கப்படவேண்டும். இதனூடாக வேலை இழப்பினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு உதவுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்மூலம் வேலை இழப்புக்கு ஆளாகும் உள்ளூர் ஊழியர்களுக்கு புதிய வேலையை தேடுதல் மற்றும் வேலைவாய்ப்பில் உதவி வழங்குவதற்கு இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அதன் முதலாளிகள் ஆள் குறைப்பு செய்யும் போது நியாயமாகவும் பொறுப்புணர்வுடன் ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என மனிதவள அமைச்சகம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.