free visa வில் பணியாற்றும் வௌிநாட்டுத் தொழிலாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள்!
சவுதி அரேபியாவில் free visa வில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஸ்பொன்சரின் கீழ் பணியாற்றும் free visa வில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த தொழில் அல்லது வேறு வேறு நிறவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் விரும்பும் தொழிலை செய்வதற்கோ அல்லது விரும்பும் இடங்களில் பணி செய்வதற்கோ ஒரு குறிப்பிட்டத் தொகையை தமது ஸ்பொன்ஸருக்கு அப்புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர். கஃபாலா, free visa என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் இந்த வீசா முறையை கடுமையாக கண்டித்துள்ள அந்நாட்டு அரசாங்கம் தண்டனை முறையைும் அறிவித்துள்ளது.
சவுதி அரோபியாவில் தொழில் அமைச்சில் தொழில் நிறுவனங்களாக பதிவு செய்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வைத்துக்கொள்வதற்காக சவுதி அரசாங்கம் தொழில் வீசாக்களை வழங்கி வருகிறது. இவ்வாறு வீசாக்களை வாங்கும் சில சவுதி நாட்டினர் வௌிநாட்டில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து அவர்களை சுயதொழில் செய்வதற்கும் விரும்பிய இடங்களுக்கு சென்று தொழில் செய்வதற்கும் அனுமதியளிக்கின்றனர். ஆண்டு தோறும் இக்காமா புதிப்பித்தல், தொழிலாளர் அட்டை புதுப்பித்தல், விடுமுறைக்காக நாட்டுக்கு செல்வதற்கான வௌிச்செல்லல், உள்நுழைதல் என்பவற்றை செய்துகொடுக்குகின்றனர். இவ்வாறு செய்துகொடுப்பதற்காக புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இந்த நடைமுறையை அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
இவ்வாறு தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைத்து அவர்களை வௌியிடங்களுக்கு வௌியிடங்களுக்கு வேலைக்கு அனுப்பும் சவுதி பிரஜைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு free visa வில் இருக்கு ஒவ்வொரு வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 3மாத சிறை மற்றும் 50,000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொருத்து தண்டனை இரட்டிப்பாக்கப்படும். அத்துடன் ஒரு ஆண்டு காலத்திற்கு புதிய தொழிலாளர்களை சேர்ப்பதற்கான அனுமதியும் மறுக்கப்படும். குற்றச்செயலில் மீண்டும் ஈடுபடுவது தெரிந்தால் தண்டனை மற்றும் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்.
அதேபோல், free visaவில் பணியாற்றும் வௌிநாட்டுத் தொழிலாளர்கள் அடையாளங்காணப்பட்டால் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 50,000 ரியால்களும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் தண்டனை காலம் முடிந்தவுடன் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் வேறு ஸ்பொன்ஸரின் கீழிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை விதிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.