இலங்கையர்களுக்கு தற்காலிக தடை விதித்த சவுதி அரேபியா!

இலங்கையர்களுக்கு தற்காலிக தடை விதித்த சவுதி அரேபியா!

இலங்கை, இந்தியா உட்பட சில நாடுகளின் பிரஜைகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு தற்காலிக தடையினை சவுதி அரேபியா விதித்துள்ளது.

நேற்று (23) சவுதி அரசாங்கம் வௌியிட்டுள்ள அறிக்கைள் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சவுதி பிரஜைகள் இந்நாடுகளுக்கு செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் வேறு நாடுகளில் உள்ள சவுதிப் பிரஜைகள் மற்றும் சமயத்தலைவர்கள் 72 மணி ​நேரத்துக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் தலைத்தூக்கியுள்ள நிலையில் சவுதி அரசு இத்தற்காலிக தடை விதித்துள்ளது. எனினும் இத்தடை சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செல்லுபடியாகாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஸியா மற்றும் பிலிப்பனைஸ் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image