சவுதி அரேபியாவில் தற்போது குளிர் காலநிலை நிலவுவதாகவும் இந்நிலை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை தொடரலாம் என்றும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் தபுக், வடக்கு எல்லை, அல்-ஜூவ் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 3 வீதம் தொடக்கம் பூச்சியம் வீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அல் குவாசிம், அல் சர்க்கியா மற்றும் ரியாத் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 4 வீதமாக காணப்படக்கூடும் என்றும் மக்கா, மதீனா, அல் ஜூவ், ஹைல் மற்றும் அல் காசிம் ஆகிய பகுதிகளில் புழுதிப்புயல் வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.