சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி, குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு திரும்பாத வெளிநாட்டினர், மீண்டும் நாட்டுக்கு திரும்ப தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு கடவுச்சீட்டுக்கான தலைமையகம் (Jawazat) அறிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு அந்நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.
மறு நுழைவு விசாவைக் கொண்ட வெளிநாட்டவர்கள் விசாவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் நாடு திரும்ப வேண்டும், இல்லையெனில் புதிய விசாவை முதலாளி வழங்க வேண்டும் என்று கடவுச்சீட்டுக்கான தலைமையகம் கூறியுள்ளது.
"வெளியேறினார் மற்றும் நாடு திரும்பவில்லை" என்ற பதிவு விசா காலாவதியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு அனைத்து வெளிநாட்டவருக்கும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.