சவுதி பராமரிப்புதுறையில் இலங்கையருக்கு வாய்ப்பு

சவுதி பராமரிப்புதுறையில் இலங்கையருக்கு வாய்ப்பு

பராமரிப்பு மற்றும் தாதியர் பணிகளுக்கு இலங்கையர்களை இணைத்துக்கொள்வதற்கு சவுதி ஆரேபிய முன்னணி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று அந்நட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் அந்நாட்டு முன்னணி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் பராமரிப்பு பணிகளுக்கு இலங்கையர்களுக்கு சிறந்த கேள்வி நிலவுவதாகவும் ஏற்கனவே வீட்டுப்பணி மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எனினும் அவர்களுக்கு அவர்களுக்கு அவசியமான பயிற்சிகள் இல்லாத காரணத்தினால் உயர்ந்த சம்பளம் பெறமுடியாதுள்ளது. எனவேஇலங்கையில் NVQ தர பயிற்சிகள் வழங்கி சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts