FIFA 2022 - தொடரும் புலம்பெயர் தொழிலாளர் மீதான மீறல்கள்!

FIFA  2022 - தொடரும் புலம்பெயர் தொழிலாளர் மீதான மீறல்கள்!

FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி 2022 நடைபெற மூன்று மாதங்கள் உள்ள நிலையில், பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேர் வரை கட்டார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

போட்டி நடைபெற முன்னர் சர்வதேச ரீதியாக கட்டார் தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய வளைகுடா அரபு நாடுகளைப் போலவே, கட்டாரும் வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிதும் நம்பியுள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக இடம்பெற்ற தொழிலாளர்களின் போராட்டம், அதற்கு கட்டார் மேற்கொண்ட நடவடிக்கை கவலையை இன்னும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் தொழிலாளர் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர், பாதுகாப்புத் தரப்பினர், தொழிலாளர்களின் கவனிப்பை மேம்படுத்துவது தொடர்பில் கட்டார் வழங்கியுள்ள உறுதிமொழிகளில் புதிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டங்களை மீறியமை தொடர்பாக பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கட்டார் அரசு அசோஸியேடட் ப்ரஸ் செய்திச்சேவைக்கான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அல்லது நாடு கடத்தப்பட்டவர்கள் பற்றிய எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டது.

கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஹோட்டல்கள், உணவு சேவை மற்றும் பிற முயற்சிகளை உள்ளடக்கிய கூட்டு நிறுவனமான அல் பண்டரி இன்டர்நேஷனல் குழுமத்தின் டோஹா அலுவலகங்களுக்கு வெளியே ஆகஸ்ட் 14 அன்று சுமார் 60 தொழிலாளர்கள் தங்களது சம்பளம் குறித்து கோபமடைந்ததை ஆர்ப்பாட்டம் நடத்திய வீடியோக்கள் ஒன்லைனில் வௌிவந்திருந்தது.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் அல் ஷவுமக் கோபுரத்துக்கு முன்பாக பாதையை மறைத்து போராட்டம் நடத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு ஆட்சியாளர் ஷீக் தமீம் பின் ஹமாட் அல் தானியுடைய உருவப்படம் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
nbcnews

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image