இலங்கையில் நிலவும் மருந்து பற்றாக்குறைக்கு உதவும் வகையில் கட்டார் செம்பிறைச் சங்கம், USD 100,000/- நிதியை ஒதுக்கியுள்ளது என்று கட்டாருக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டார் வௌிவிவகார அமைச்சர் Lolwah Rashid Al-Khater, அலுவலக பேச்சாளர் மற்றும் பிரதி வௌிவிவகார அமைச்சருக்கும் கட்டாருக்கான இலங்கை தூதுவர் மஃபாஸ் மொஹிதீன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.