கட்டார் எயார்வேஸில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

கட்டார் எயார்வேஸில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை இலங்கையர்களை பணிக்கு உள்வாங்க தீர்மானித்துள்ளது.

 அதற்கமைய தகமைவாய்ந்த ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்த்துள்ளதாக கட்டார் எயார்வேஸ் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை Qatar Airway Group உத்தியோகப்பூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

எயார்வேஸில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இலங்கையர்கள் உள்வாங்கப்படவுள்ளமையினால் இம்மாதம் 15ம் திகதி (நாளை) தொடக்கம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் ஏர்வேஸ், கட்டார் டியூட்டி ஃப்ரீ, கட்டார் ஏவியேஷன் சர்வீசஸ், கட்டார் ஏர்வேஸ் கேட்டரிங் கம்பெனி, கட்டார் விநியோக நிறுவனம் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புக் காணப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தவிர நாளையும் (15) நாளை மறுதினமும் (16) ஆட்சேர்ப்பு சேவை கொழும்பில் நடைபெறவுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image