கட்டாரில் பணியாற்றிய சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த 10 வருட காலத்துக்குள் இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று த கார்டியன் செய்தி வௌியிட்டுள்ளது.
2010 டிசம்பர் தொடக்கம் 2020 டிசம்பர் வரையான காலப்பகுதியை நோக்கின் வாரத்திற்கு 12 பேர் என்ற வகையில் மேற்குறிப்பிட்ட 5 ஆசிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
2011 - 2020 வரையான காலப்பகுதியில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பெறப்பட்ட தரவுகளுக்கமைய 5,927 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
2010 - 2020 வரையான காலப்பகுதியில் 824 பாகிஸ்தானியர்கள் கட்டாரில் உயிரிழந்துள்ளனர்.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் உலக காற்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.