கட்டாரிலிருந்து இலங்கைக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கான விமான சேவை அட்டவணை

கட்டாரிலிருந்து இலங்கைக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கான விமான சேவை அட்டவணை
கட்டாரில் கொரோனாவினால் சிக்கியுள்ள இலங்கையர்களில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் வசதியை தெரிவு செய்து தாயகம் செல்லவுள்ளவர்களுக்கான விமானச் சேவைகளின் அட்டவணையை கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது. 
 
அதன் படி, முதல் விமானம், மார்ச் 9ம் திகதியும், இரண்டாவது விமானம் மார்ச் 11ம் திகதியும், 3வது விமானம் மார்ச் 12ம் திகதியும், 4வது விமானம் மார்ச் 13ம் திகதியும் கட்டார் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
ஹோட்டல் தனிமைப்படுத்தல் மூலம் தாயகம் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உரிய கட்டணங்களை கீழே உள்ள அட்டவணைகளில் உள்ள நேரம் மற்றும் திகதி அடிப்படையிலும் தூதரகத்திற்கு சமூகம் தந்து செலுத்திச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் இந்த அறிவிப்பில், தமிழ் மொழியிலான அறிக்கை எழுத்துப் பிழைகளுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
156635987_1906194302868510_3437730957295378217_o.jpg
 
Hotel Quarantine Flight Schedule

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image