இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளுக்கான பயணக்கொள்கையை புதுப்பித்துள்ளதாகவும் அந்நாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டார் அறிவித்துள்ளது.
இன்று (02) முதல் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கட்டார் வருகைத்தருபவர்களுக்கே இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கல்ப் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்மைய, மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து வருகைத் தரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் இரு நாட்களும் ஏனையவர்கள் 10 நாட்களும் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருத்தல் கட்டயம் என்று கட்டார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2.3 மில்லியன் வௌிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட 2.7 மில்லியன் சனத்தொகையுள்ள கட்டாரில் கொவிட் 19 பரவலுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி பாரிய தடுப்பூசி வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பைசர், மொடேர்னா, ஜொன்சன்ஸ் அண்ட் ஜொன்சன்ஸ மற்றும் சைனோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.