கொவிட் 19 கட்டுபபாடுகளை தளர்த்தும் கட்டார்

கொவிட் 19 கட்டுபபாடுகளை தளர்த்தும் கட்டார்

கொவிட் 19 பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து கட்டுப்பாட்டு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர கட்டார் அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் 80 வீதமான ஊழியர்கள் சேவைக்கு வருகைத் தர முடியும் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது.

மேலும், அலுவலக கூட்டங்களில் 17 பேர் கலந்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7 வயதுக்கு மேற்பட்டவர்கள் வணக்கஸ்தலங்கள் திறந்து வைகப்படவுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஐவர் ஒன்றாக கூட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட 20 பேர் அல்லது செலுத்திக்கொள்ளாத 10 பேர் வௌியிடங்களில் கூட முடியும்.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விற்பனை நிலையங்கள் 50 வீதமானவர்களுக்கும் திரைப்படக்கூடங்கள் 30 வீதமானவர்களுக்கும் திறக்கப்படவுள்ளன. 30 வீதமான பொதுப்போக்குவரத்து சேவைகள் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளன. சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழுகுகலை நிலையங்கள் என்பன 30 வீதமானவர்களுக்கு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image