கட்டார் நாட்டில் கடமையாற்றும் போது பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரை புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரச மரியாதையுடன் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டார் அமீர், எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் உள்ள பல கைதிகளுக்கு அரச மரியாதையாக பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
.பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு நீதிமன்ற தண்டனை பெற்று சிறைத் தண்டனை பெற்ற 20 இலங்கையர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைத்தண்டனையில் மாத்திரமன்றி அவர்கள் நீதிமன்றத்திற்கு செலுத்தவேண்டிய நிதிரீதியான அபராதத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ரமழான் நிமித்தம் எடுக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கட்டார் அரசுக்கு தனது பாராட்டை வௌியிட்டுள்ளது.