கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான செயலமர்வு

கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான செயலமர்வு

கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுடைய நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வொன்றை கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

கட்டார் தொழில் அமைச்சு மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி கட்டார் நேரப்படி மு.ப.9.00 மணிக்கு (இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு) Zoom தொழில்நுட்பத்தினூடாக இச்செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இச்செயலமர்வில், கட்டார் நாட்டின் தொழிற்சட்டம், கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள், தொழில்வீசா பெற்றுக்கொள்ளும் போது எதிர்நோக்கும் பிரச்சிகைள் மற்றும் சம்பளம் வழங்கப்படாத சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இச்செயலமர்வில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

செயலமர்வுக்கான Zoom விலாசம் பின்னர் அறிவிக்கப்படும்.

QatarTamil2

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image