சட்டவிரோதமாக கனடா செல்ல திட்டமிட்ட இலங்கையர்கள் கேரளாவில் கைது!

சட்டவிரோதமாக கனடா செல்ல திட்டமிட்ட இலங்கையர்கள் கேரளாவில் கைது!

கனடா செல்லும் நோக்கில் தெற்கு கேரளா, கொல்லம் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கமைய, கேரளா பொலிஸாரால் குறித்த நபர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் சென்ற இரு இலங்கையர்கள் தலைமறைவாகியமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுடைய தொலைபேசி சிக்னல்களை பின்பற்றி அவர்கள் கொல்லம் பகுதியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடத்தப்பட்ட தேடல்களின்போது காணாமல் போன இருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர்கள் தலா 2.5 இலட்சம் இந்திய ரூபாய்களை கொழும்பில் உள்ள லக்மனா என்ற முகவரிடம் செலுத்தி இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து கப்பல் மூலம் கனடா செல்ல திட்டமிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புலனாய்வு பிரிவினரும் கேரளாவுக்கு சென்று குறித்த சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர்களுக்கு பல உள்ளூர்வாசிகளும் உதவி செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கொல்லம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image