சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர் விடுவிப்பு

சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர் விடுவிப்பு

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த  16 புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள், முகாமுக்கு வெளியே தங்கியிருக்கும் காரணத்தினால், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் நேற்று (02) வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு முகாமில், மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் மற்றும் சிலர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையர்களில் 11 பேர் தமிழ்நாடு மாநித்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து வந்தவர்கள், மேலும் ஐந்து பேர் சொந்தமாக வெளியில் தங்கியிருந்தனர். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அந்தந்த வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்கொள்வதுடன், எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர் எம் பிதீப் குமார் மற்றும் நகர பொலிஸ் ஆணையாளர் ஜி. கார்த்திகேயன் ஆகியோர் முகாமுக்கு சென்று குறித்த 16 பேருடன் உரையாடியதுடன் வீடு செல்ல அனுமதித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image