சிட்னியில் வௌ்ளம்- 50,000 பேர் இடப்பெயர்வு!

சிட்னியில் வௌ்ளம்- 50,000 பேர் இடப்பெயர்வு!

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வெள்ளம் தாக்கியதால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாத மழை பெய்துள்ளது.

சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, சில வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

அவுஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்ட கடும் மழை வௌ்ளம் காரணமாக இந்த ஆண்டு மாத்திரம் 20இற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

தற்போதைய அவசரநிலையினால் கிரேட்டர் சிட்னி முழுவதும் 100 இற்கும் க்கும் மேற்பட்டவர்களை வௌியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேலும் 50 பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறத் தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹண்டர் மற்றும் இல்லவர்ரா பகுதிகளுலும் கடுமையான வானிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image