நீண்ட போராட்டத்தின் பின் பிலோலா திரும்பிய நடேசலிங்கம் குடும்பம்!

நீண்ட போராட்டத்தின் பின் பிலோலா திரும்பிய நடேசலிங்கம் குடும்பம்!

விசா காலாவதியான நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கை குடும்பம் அவுஸ்திரேலியாவில் முன்னர் வசித்த நகருக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த பிரியா - நடேசலிங்கம் குடும்பத்தினரது விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த சூழலில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பியது அவுஸ்திரேலியா அரசு.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய அந்நாட்டு தொழிற்கட்சி மீண்டும் அக்குடும்பத்தை அவர்கள் வாழ்ந்த பகுதிக்கே சென்று வாழ அனுமதித்தமையினால் அவர்கள் பிலோலா நகருக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Australia 2

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image