அவுஸ்திரேலிய கடலோரத்தில் இலங்கை இளைஞரின் சடலம்?

அவுஸ்திரேலிய கடலோரத்தில் இலங்கை இளைஞரின் சடலம்?

அவுஸ்திரேலியாவின் ட்ரன்மியர் நகர கடற்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இலங்கையராக இருக்கலாம் என்று அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.40 மணியளவில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுகக்ைமய இச்சடலகம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இம்மரணம் சந்தேகத்துக்குரியதாக காணப்படவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 18 -25 வயதுக்குட்பட்ட இலங்கையராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிஸார் இன்னும் அவர் குறித்த விபரங்கள் கண்டறியப்படவில்லை என்பதனால் அதற்கு பொது மக்களின் உதவி அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேறொரு இடத்தில் கடலில் விழுந்து குறித்த பகுதியில் கரையொதுங்கியிருக்கலாம் என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image