அவுஸ்திரேலியா- கன்பெரா பகுதியில் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பத்தின் உயிரிழப்பு தொடர்பில் கொலை, தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து

அவுஸ்திரேலியா- கன்பெரா பகுதியில் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தமிழ் குடும்பத்தின் உயிரிழப்பு தொடர்பில் கொலை, தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்பரா வடக்கில் மிகப் பிரபலமான யெர்பி குளத்தில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நடைபாதை, விளையாட்டு மைதானம் ஸ்கேட் பார்க் போன்ற வசதிகளுடன் கொண்ட இக்குளப் பகுதியில் பணியாளர் ஒருவர் தாய் மற்றும் ஒரு மகனுடைய சடலங்களை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டதுடன் தாமதமாக மற்றொரு சிறுவனுடைய சடலமும் மீட்டகப்பட்டுள்ளதாக யாஹூ செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் உயிரிழப்பிற்கான தெளிவான மரண விசாரணை அறிக்கையை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மூவரும் உயிரிழந்த குளத்திற்கு அருகில் வாகனமொன்று நிறுத்தப்பட்டடிருந்த நிலையில், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com