பிரியா - நடேஸ் தம்பதிகளுக்கு நிரந்தர விசா வழங்க தீர்மானம்

பிரியா - நடேஸ் தம்பதிகளுக்கு நிரந்தர விசா வழங்க தீர்மானம்

பிரியா-நடேஸ் குடும்பத்தினர் சமூக தடுப்பிலிருந்து (community detention) விடுவிக்கப்பட்டு, குயின்ஸ்லாந்தின் Biloela சென்று வாழ்வதற்கு லேபர் அரசு அனுமதியளித்திருந்த பின்னணியில், தற்போது இக்குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles அறிவித்துள்ளார்.

குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற முறையில், தனக்கு முன் இருந்த அனைத்து தெரிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் அடிப்படையில், குடிவரவுச் சட்டம் 1958 இன் பிரிவு 195A இன் கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ வழிசெய்யும்வகையில் நிரந்தர விசாக்கள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பின்னணியில், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இக்குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என உறுதியளித்ததற்கிணங்க, இன்று அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.

SBS Tamil

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image