சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 15 பேர் இன்று (09) விமானமூடாக கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இலங்கைக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 - 30 வயதுக்குட்பட்ட ஆண்களே இவ்வாறு நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
19 நாட்களுக்கு முன்னர் குறித்த நபர்களை ஏற்றிய மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் இயந்திர படகு அவுஸ்திரேலிய கடற்பிரதேசத்தை அண்மித்த போது இயந்திரகோளாறு காரணமாக நின்றதையடுத்து அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களுடன் பல அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரும் வந்திருந்தனர். இந்நபர்கள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பொறுப்பேற்று கட்டுநாயக்க விமான நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். பொலிஸார் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர்.