இலங்கை இளைஞருக்கு 13 வருடம் சிறை- ஆஸியில் நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கை இளைஞருக்கு 13 வருடம் சிறை- ஆஸியில் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிகளிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்த 24 வயது இலங்கையருக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அவுஸ்திரேலிய நீதிமன்றம்.

விக்டோரியா பிராந்திய நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

உயர்கல்வியை தொடர்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள குறித்த நபர் இலங்கையின் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு பல சிறுமிகளை மிரட்டியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அனுப்பாவிடின் போலியாக புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு உறவினர் மற்றும் நெருங்கியவர்களுக்கு அனுப்பப்போவதாக குறித்த இளைஞர் மிரட்டியுள்ளார். அவ்வாறு அவர் மிரட்டியுள்ள சிறுமிகளில் 10 வயது சிறுமியொருவரும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளைகளை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்

புலம்பெயர் தமிழர் நீரில் மூழ்கி பலி!

இச்சம்பவம் தொடர்பில் 2020ம் ஆண்டு பெடரல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைகளையடுத்து குறித்த நபருக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் குறித்த இளைஞர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்றும் அவுஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image