பிள்ளைகளை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்

பிள்ளைகளை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்

இலங்கையர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அவுஸ்திரேலியா பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

40 வயதான இந்திக்க குணதிலக்க என்ற நபரே தனது 4 வயது மகள் மற்றும் 6 வயது மகன் ஆகியோரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் ஹண்டின்டேல் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பிள்ளைகளை கொலை செய்த பின்னர் சந்தேகநபர் வாகனம் நிறுத்துமிடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வௌ்ளிக்கிழமை 6.30 மணிக்கு தாயுடன் இடம்பெறவிருந்த சந்திப்பிற்கு குழந்தைகள் அழைத்து வரப்படாமையினால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலையுடன் மூன்றாம் நபர் தொடர்புபட்டமை உறுதிப்படுத்தப்படவில்லையென்கிறார் அப்பிராந்திய பிரதி பொலிஸ் ஆணையாளர் அலன் அடம்ஸ்.

குறித்த சடலங்கள் கண்டு பிடிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர், பிள்ளைகளுடன் கைகளை கோர்த்தபடி சூரிய அஸ்த்தனத்தை ரசிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதேவேளை நத்தாருக்கு முன்னர் சந்தேகநபர் வௌியிட்டிருந்த 18 நிமிட காணொளியில் அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது தொடர்பிலும் அதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்வது, மருத்துவரை சந்தித்ததை உறுதிப்படுத்தியிருந்மை குறிப்பிடத்தக்கது.

நகர திட்டிமிடலாளராக பணியாற்றிய குணதிலக்க பின்னர் IMG Town Planning and Development Solutions என்ற வியாபாரத்தை 2014ம் ஆண்டு ஆரம்பித்தார். பாடகரான அவர் மேற்கு அவுஸ்திரேலிய றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்ற இலங்கை சமூக அமைப்பின் அங்கத்தவரும் ஆவர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image