புலம்பெயர் தொழிலாளர்களினால் வருடாந்தம் 7 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களினால் வருடாந்தம் 7 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

 கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணமானது, இலங்கையின் அந்நிய செலாவணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் வருடாந்தம் சராசரியாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிலையான கடன் அல்லாத வரவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பணம் அனுப்புவது அவர்களின் முழுத் திறனையும் அடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது தொழில், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு, சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வங்கித் துறை உட்பட பல பங்குதாரர்களுடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓய்வூதியம்/மேற்பட்டுப் பலன்கள், விபத்து/ஆயுள் காப்புறுதிப் பலன்கள், இலங்கைக்குத் திரும்பியவுடன் வீடு மற்றும்/அல்லது சுயதொழிலுக்கான குறைந்த வட்டிக் கடன்கள் உட்பட வங்கி வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரியில்லா சலுகைகள் ஆகியவை இப்பொதியில் உள்ளடங்குகின்றன என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

முறையான வங்கி முறை அல்லது வேறு ஏதேனும் முறையான பணப்பரிமாற்ற முறை மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புவதனூடாகவே இச்சலுகைப் பொதி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். சலுகைகள் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியின் அளவுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட ஊக்கத்தொகையின் செயல்பாட்டு விவரங்கள் உரிய நேரத்தில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வங்கித் துறையுடன் கலந்தாலோசித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதற்கிடையில், இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியின் பெறுமதியானது இலங்கையில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு முறையான வங்கிச் சேவைகள் மூலம் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image