குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளாகிய 45 பேர் நாடு திரும்பினர்

குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளாகிய 45 பேர்  நாடு திரும்பினர்

குவைத்துக்கு வீட்டுப் பணி உட்பட பல தொழில்களுக்கு சென்று பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 47 பேர் இன்று (25) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பலர் அவர்களுடைய தொழில் வழங்குநர்களினால் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு, சுகவீனமுற்ற நிலையில் நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் 42 வீட்டுப் பணிப் பெண்களும் 5 வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இன்று (25) காலை 6.40 மணிக்கு ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குவைத்தில் பணிக்காக சென்ற சுமார் 1300 பேர் நாடு திரும்ப முடியாத நிலையில் அந்நாட்டில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் அந்நாட்டுக்கான மூன்றாவது செயலாளர் ஜனக்க சமரசேக்கர தெரிவித்தார் என அத இணையதளம் செய்தி வௌியிட்டிருந்தது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image