சட்டவிரோதமாக ரியுனியன் தீவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர் மீண்டும் நாட்டுக்கு!

சட்டவிரோதமாக ரியுனியன் தீவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர் மீண்டும் நாட்டுக்கு!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ரி யுனியன் தீவுக்கு கரையேர முயற்சித்த 36 இலங்கையர்கள் நேற்று (25) மீண்டும் விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்னர்.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் 5 ஊழியர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கிளம்பிய IMUL- A - 0532 -CHW என்ற மீன்பிடிப்படகில் டிசம்பர் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் புத்தளம் பத்தளம்குண்டு தீவில் இருந்து 3 டிங்கி படகுகளை பயன்படுத்தி 64 பேர் ஏற்றிக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த படகானது சட்டவிரோமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு முதலில் பிரித்தானியாவுக்கு சொந்தமான தியாகோ கார்சியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளது. குறித்த படகை கடந்த 30ம் திகதி கைது செய்த பிரித்தானிய கடற்படையினர் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆட்கடத்தற்காரர்கள் குறித்த நபர்களை பிரான்ஸுக்கு சொந்தமான ரீயுனியன் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனவரி மாதம் 14ம் திகதி ரி யுனியன் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் அந்நாட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவர்களில் 36 பேர் இவ்வாறு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுளளனர்.

குறித்த படகில் பயணித்த 3 ஊழியர்கள் உட்பட 18 வயதுக்கு மேற்பட்ட 33 ஆண்களும் 2 பெண்களும் 18 வயதுக்கு குறைந்த சிறுவன் சிறுமி உள்ளடங்களாக 38 பேர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றவியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக செல்வதற்காக ஒருவரிடமிருந்து 40,0000 தொடக்கம் 1,000,000 வரை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image