கடந்த 24 மணி நேரத்தில் வௌிநாட்டவர் உட்பட 1020 இலங்கை வருகை

கடந்த 24 மணி நேரத்தில் வௌிநாட்டவர் உட்பட 1020 இலங்கை வருகை

வௌிநாடுகளில் பணியாற்றி வந்த இலங்கையர்கள் உட்பட 1020 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைநதுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் வௌிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர் மாத்திரமன்றி 110 வௌிநாட்டவர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர் என்று கட்டுநாயக்க விமானநிலைய பொறுப்பு முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு, ஜப்பான், சீனா, குவைத், சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts