இலங்கையர்களை சட்டவிரோதமாக வௌிநாடு அனுப்ப முயன்ற சந்தேகநபர் இந்தியாவில் கைது!

இலங்கையர்களை சட்டவிரோதமாக வௌிநாடு அனுப்ப முயன்ற சந்தேகநபர் இந்தியாவில் கைது!

கடந்த 2021ம் ஆண்டு 61 இலங்கையர்களை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மொஹம்மட் இம்ரான்கான் எனப்படும் ஹஜா நஜார்பீடன் என்ற சந்தேகநபர் தேனிப் மாவட்டத்தில் மறைந்திருந்த நிலையில் பெங்களூரு தேசிய புலானாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்து, பல்வேறு புலனாய்வு நிறுவனங்களினால் தேடப்பட்டு வந்த குறித்த நபர் பல மாதங்களாக புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க அங்கத்தவரான ஈசான் என்பவருடன் இணைந்து இக்கடத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளார்.

23 இலங்கையர்களையும் மங்களூருவில் தஞ்சம் வழங்க உதவிய 4 முகவர்களையும் மதுரையில் வைத்து தமிழ்நாடு கியு பிரிவு பொலிஸார் 2021ம் ஆண்டு கைது செய்தனர். இவ்விடயம் தொடர்பில் 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன் தினகரன் எனப்படும் ஐயா, காசி விஸ்வநாதன், ரசூல், சதாம் ஹூசைன், அப்துல் முஹீட்டு ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர்களை மதுரையில் இருந்து மங்களூருவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் கனடாவுக்கு அனுப்ப இக்குழு திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

டைம்ஸ் ஒப் இந்தியா

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image