​லெபனானில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி!

​லெபனானில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி!

லெபனானின் பெய்ரூட் நகரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்தமையினால் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாபா தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டடம் கடந்த 16 ஆம் திகதி இடிந்து வீழ்ந்திருந்தது.

கட்டட இடிபாடுகளில் இருந்து குறித்த பெண் மற்றும் அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய, அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அல்லது அந்த நாட்டிலேயே இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image