இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் குறித்த அறிய...

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் குறித்த அறிய...

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான இரண்டு தொலைபேசி இலக்கங்களை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இஸ்ரேலில் காணப்படும் யுத்த நிலை காரணமாக அங்கு பணியாற்றும் இலங்கையர்களின் நிலைமைத் தொடர்பில் உறவினர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இவ்விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக அல்லது 1989 என்ற வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக உடனடி தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இஸ்ரேலில் தற்போது சுமார் 8000 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 90 வீதமானவர்கள் பராமரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

அந்நாட்டில் உள்ள தூதுவராலய அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கு பணியாற்றும் இலங்கையர்களை பாதுகாப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image