சவுதிக்கு சென்ற இலங்கைப் பெண் ஊசிகள் ஏற்றப்பட்டு சித்திரவதை

சவுதிக்கு சென்ற இலங்கைப் பெண் ஊசிகள் ஏற்றப்பட்டு சித்திரவதை

சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண்ணொருவருடைய உடலில் குண்டூசிகளை செலுத்தி சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.


குறித்த பெண் கிசிச்கைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சத்திரசிகிச்சையினூடாக இரு ஊசிகள் அகற்றப்பட்ட நிலையில் ஏனையவற்றை அகற்றுவதற்கு மீண்டும் அடுத்த மாதம் வைத்தியசாலைக்கு வருவைத்தருமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை லிந்துல கெனிகல் தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.

அவருடைய கைகள், தொடைப் பகுதியுட்பட உடலில் பல பாகங்களில் குண்டூசி செலுத்தப்பட்டுள்ளது. மொழி தெரியாத காரணத்தினால் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவள் கைகள், தொடைகள் மற்றும் உடலின் பல பாகங்களில் அடிக்கப்பட்டு குத்தப்பட்டாள். மொழி தெரியாததால் தான் சித்ரவதை செய்ததாக சித்ரவதை செய்யப்பட்ட பெண் கூறியுள்ளார்.

லங்காதீப

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image