பிரித்தானியாவுக்கு இலகுவாக செல்ல வாய்ப்பு!

பிரித்தானியாவுக்கு இலகுவாக செல்ல வாய்ப்பு!

கட்டுமானத்துறையில் காணப்படும் ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

வௌிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைப்பிக்கும் வகையில் விசா நடைமுறைகளில் நெகிழ்தன்மையை மேற்கொள்ளவும் பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, மேசன் பாஸ், கூரை செய்பவர்கள், தச்சர், ஒட்டுநர்கள் மற்றும் பூச்சுநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மிக குறைந்த செலவில் நெகிழ்த்தன்மையுடன் கூடிய தொழில் விசாக்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த துறைகளில் நாட்டில் நிலவும் கடுமையான பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேய பிரித்தானியா புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு உள்நாட்டு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய தேசிய உள்கட்டமைப்பை வழங்குவதற்கும், தொடர்புடைய தொழில்களுக்கான வளர்ச்சியைத் முன்னெடுக்க நிவர்த்தி செய்யும் வகையில் சுதந்திரமான இடம்பெயர்வு ஆலோசனைக் குழு, கட்டுமான வேலைகளை பற்றாக்குறையை ஆளணி பற்றாக்குறை பட்டியலில் சேர்க்க கடந்த மார்ச் மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பட்டியலில் ஏற்கனவே பராமரிப்புப் பணியாளர்கள், சிவில் இன்ஜினியர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறைச் சார்ந்தவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மாத்திரம் பிரித்தானியாவுக்கு சுமார் 606,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று மே மாதம் வௌியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வௌியேறி பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாத காரணத்தினால் இவ்வாறு ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று இருந்து விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறையான தொழிலில் பணிபுரிபவர்கள் வழக்கமான கட்டணத்தில் 80 வீதத்தை செலுத்தி விசாவுக்கான தகுதியைப் பெறலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.தொழில் வழங்குநருடைய கடிதம் மற்றும் ஆங்கில புலமை என்பன விண்ணப்பிப்பதற்கு அவசிமானவையாக குறிப்பிடப்படுகிறது.

Reuters

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image