இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் பலி!

இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் பலி!

இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் உறவினர்களுடன் இத்தாலியின் மிலானோ பிரதேசத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆற்றில் குளிப்பதற்கு சென்றபோது மகன் நீரில் அடித்துச் செல்லும்போது அவரைக் காப்பாற்ற நீரில் பாய்ந்த தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தந்தை மற்றும் மகனுடைய சடலங்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரான துலாஜ் நிலஞ்சன் கிரிக்கட் வீரர் என்பதுடன் அந்நாட்டு கிரிக்கட் சங்கமொன்றில் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த தந்தை 8 வருடங்களுக்கு முன்னர் இத்தாலிக்கு சென்றுள்ளார் என்பதுடன் மகன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். அவருடைய மனைவி சில மாதங்களுக்கு முன்னரே இத்தாலிக்கு சென்றுள்ளார்.

உயிரிந்த தந்தை மற்றும் மகனுடைய இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image