வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன நேற்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 21,467 ரூபாவாகும்.  முன்னதாக குறித்த கட்டணம் 17,928 ரூபாவாகக் காணப்பட்டது. 

பதிவை புதுப்பிப்பதற்காக அறவிடப்பட்ட 3,774 ரூபா கட்டணம் 4 ,483 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் 17,949 ரூபாவில் இருந்து 58,975 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.  

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image