இத்தாலிக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் குறித்து தகவலளிக்க விசேட இலக்கங்கள்

இத்தாலிக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் குறித்து தகவலளிக்க விசேட இலக்கங்கள்

லெபனான் ஊடாக இலங்கையர்களை படகு மூலம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது போன்று பணத்தைப் பெற்றுக்கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் இத்தாலி நோக்கி பயணித்த போது படகுகள் விபத்துக்குள்ளாகி ஏதிலிகளாக புலம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் தெரிந்தால் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் புலனாய்வு திணைக்களத்தின் 011 2 864 214 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image