சுற்றுலா வீசாவில் மலேசியா செல்ல முடியுமா?

சுற்றுலா வீசாவில் மலேசியா செல்ல முடியுமா?

சுற்றுலா வீசாவினூடாக மலேசியாவிற்கு சென்ற பின்னர் எந்த காரணத்திற்காகவும் பிறகு தொழில் வீசாவாக மாற்ற முடியாது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள பணிகம், எந்தகாரணம் கொண்டும் சுற்றுலா வீசாவினை பயன்படுத்தி மலேசியா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

மலேசியாவில் தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக பலர் தொழில்வாய்ப்பை நாடுவோரிடமிருந்து பணம்பெற்றுக்கொண்டதாக பணியகத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பணியகம் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா வீசாவூடாக மலேசியாவிற்கு தொழில்வாய்ப்பை நாடி செல்ல வேண்டாம் என்றும் இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக முறையிடுமாறும் பணியகம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image