கத்தார் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

கத்தார் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கத்தார் சந்தைகளில் விற்கப்படும் இறால்களை சாப்பிட வேண்டாம்  என்பதாக சுகாதார அமைச்சு தகவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தார் பொது சுகாதார அமைச்சின் உணவு ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கத்தாரின் சந்தைகளில் விற்கப்படும் இறால்களில் சாப்பிட உகந்தவை அல்ல எனவும், மனிட உடலுக்கு ஒவ்வாத நுண்ணுயிர் கிருமிகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார அமைச்சானது, நகராட்சிகள்  (பலதிய்யா) ஒத்துழைப்புடன், இந்திய இறால்களின் அனைத்தையும் சந்தையில் இருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்குள் இந்திய இறால்களைக் கொள்வனவு செய்தவர்கள், அவற்றை கொள்வனவு செய்த கடைகளில் மீளகையளிக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இறால்களை சாப்பிட்டு இரைப்பை அல்லது வயிறு சம்மந்தப்பட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவ கழகங்களுக்கு சென்று உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமர்று கத்தார் பொது சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image