ஜப்பான் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகளுக்கு!

ஜப்பான் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகளுக்கு!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு பராமரிப்பாளர் பணிகள் வழங்குவதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.

Global Trust Network இலங்கையர்களுக்கு 1000க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர் வேலைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்குவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கையருக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜப்பான் சென்ற அமைச்சர் இதன்போது குளோபல் ட்ரஸ்ட் வலையமைப்பின் தலைவர் ஹிரோயுக்கி கோட்டோ, திறன்காண் தொழிலாளர் பிரிவு மேலாளர் யுகா குவஹாரா மற்றும் முன்னணி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள்.வுடன் கலந்துரையாடியபோது இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளார்.

இதன்போது இவ்வாண்டு 150 பேருக்கும் மிகுதி ஆயிரம் பேருக்கு அடுத்த ஆண்டும் பராமரிப்பாளர் பணிகளை வழங்குவதாகவும் ஜப்பான் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

குளோபல் ட்ரஸ்ட் வலையமைப்பானது ஜப்பானில் உள்ள முன்னணி தொழில்வாய்ப்பு முகவர் நிலையமாகும். இம்முகவர் நிலையத்தினூடாக சுமார் 350,000 வௌிநாட்டவர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இவ்வாறானதொரு முன்னணி நிறுவனத்துடன் இணைந்து இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது ஒரு பெரிய சாதனையாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர், ஜப்பானில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் எதிர்காலத்தில் அந்நிறுவனத்துடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image