சுற்றுலா வீசாவை தொழில் வீசாவாக மாற்ற முடியாது- பாதுகாப்பு அமைச்சு
இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், வெளிநாட்டு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதுடன் பின்னர் தொழில் வீசாவாக மாற்றிக்கொள்ளலாம் என்று முகவர்கள் தெரிவிக்கின்றனர். எனும் அவ்வாறு சுற்றுலா வீசாவை தொழில் வீசாவாக மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா வீசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத சுமார் 20 வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்படுள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலம் இவ்வாண்டு ஜூன் 30ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. மலேசிய சட்ட அமுலாக்க முகவர், செல்லுபடியாகும் விசா இல்லாத வெளிநாட்டினரை தொடர்ச்சியாக தேடப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களது சொந்த செலவில் வௌியேறும் நிலை வரும் வரையில் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் மலேஷிய குடிவரவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.