புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு!

அந்நிய செலாவணியை நாட்டுக்கு பெற்றுக்கொடுப்போருக்கு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான புதிய முறையினை மொன்றை கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டுக்கு 3000 டொலர் வரை அனுப்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அதில் 50 வீதம் பெறுமதியான மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்துக்கொள்ள முடியும்.

அதேபோல், 20,000 டொலருக்கும் மேலாக நாட்டுக்கு அனுப்பியுள்ளவர்கள் இந்நாட்டுக்கு அனுப்பியுள்ள தொகையில் 50 வீதம் வரை பெறுமதியான 65,000 டொலருக்கும் மேற்படாத தொகையில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனத்தை இறக்குமதி செய்துக்கொள்ள முடியும்.

மேலும் இறக்குமதி செய்துக்கொள்ளும் வாகனத்திற்கு தேவையான சக்தியை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான மின்சாரத்தைப் பெற அவசியமான சூரியசக்தி சேமிப்புத் தொகுதியொன்றையும் குறித்த நபர் இறக்குமதி செய்துக்கொள்வது அவசியம். அவ்வாறு இறக்குமதி செய்துக்கொள்ளும் வாகனங்களுக்கு மின்சாரசபையினால் வழங்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி சக்தியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்புதிய செயற்றிட்டத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கைத் தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image