இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு!

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு!

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது இஸ்ரேலிய வேலைகளுக்கு மட்டுமே தொழிலாளர்களை அனுப்புவதால் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்று (29) இஸ்ரேலிய வேலை தேடுபவர்கள் குழுவைச் சந்தித்த போதே திரு மனுஷ நாணயக்கார இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, ​​வேலை தேடி வந்தவர்கள் தங்களது பிரச்னைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய லொத்தர் முறையில் இஸ்ரேல் தொழில் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இஸ்ரேலில் தாதியர் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பை அதிகரிக்குமாறு இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக இஸ்ரேலில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவர் திரு.மகேந்திர குமாரசிங்க, பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனநாயக்க, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image