வௌிநாட்டுப் பணத்துடன் ஒருவர் கைது!

வௌிநாட்டுப் பணத்துடன் ஒருவர் கைது!

அனுதியின்று பெருந்தொகையான வௌிநாட்டு பணம் வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்து குறித்து நபர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்மாதுவ பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டபோது இவ்வாறு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வீட்டில் இருந்து 18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யுரோ, 645 ஸ்ரேலிங் பவுன்ஸ், ஒரு இலட்சம் ஜப்பான் யென், 1000 கட்டார் ரியால், 18,500 திராம் உட்பட வௌிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டது.

27 வயதான குறித்த சந்தேகநபர் இன்று (28) மாத்தறை நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image