ஜப்பானில் முதலாவது குரங்கம்மை தொற்றாளர்!

ஜப்பானில் முதலாவது குரங்கம்மை தொற்றாளர்!

குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் முதற்தடவையாக அடையாளங்காணப்பட்டுள்ளார் என்று ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குரங்கு அம்மைத் தொற்று உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார தாபனம் சுகாதார அவசரகால நிலையில் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளில் ஜப்பான் ஈடுபட்டு வந்த நிலையில் தொற்றாளர் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளமை மக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் 30 வயதான நபருக்கே குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜூன் மாதம் ஆரம்பத்தில் ஐரோப்பா சென்று ஜூலை நடுப்பகுதியில் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தொண்டை அரிப்பு, தலைவலி, மூட்டு வலி போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image