வௌிநாடு செல்ல 'குடும்ப பின்னணி அறிக்கை' அவசியமில்லை!

வௌிநாடு செல்ல 'குடும்ப பின்னணி அறிக்கை' அவசியமில்லை!

பெண்கள் புலம்பெயர் தொழிலுக்கு செல்வதற்காக சமர்ப்பிக்கப்படவேண்டிய குடும்ப பின்னணி அறிக்கையின் தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட பல சர்வதேச அறிக்கைகள், "குடும்பப் பின்னணி அறிக்கையை" சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத் தேவையின் காரணமாக பெண்களின் உரிமைகளில் தாக்கம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.

வௌிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இல்லையென்பதை உறுதிபடுத்துவதற்காக குடும்ப பின்னணி அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டியது கட்டாயமாகும். வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக வெளியேறும் புலம்பெயர் பெண் ஊழியர்களின் பிள்ளைகள் 05 வயதுக்கு குறையாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தவே இந்த அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில், வௌிநாட்டுப் பணிக்கு செல்லவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தபோதிலும் சில அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி குடும்ப பின்னணி அறிக்கை வழங்குவதை தாமதப்படுத்துவதனால் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையை பெற தகுதியற்ற பல பெண்கள் சட்டவிரோமான முறையில் வௌிநாடு செல்ல முயற்சிப்பதனூடாக ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். வௌிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

இவ்விடயங்களை கருத்திற்கொண்டு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள உண்மைகளை கருத்திற் கொண்டு குடும்ப பின்னணி அறிக்கையின் தேவையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இரண்டு அல்லது அதற்கு மேற்மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுடைய பெண்கள் வௌிநாடு செல்ல குடும்ப பின்னணி அறிக்கையின் அவசியத்தை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image