ஜப்பானில் தொழில்நுட்ப பயிற்சி பெற்று திரும்பிய இளைஞர் யுவதிகளுக்கு கொடுப்பனவு!

ஜப்பானில் தொழில்நுட்ப பயிற்சி பெற்று திரும்பிய இளைஞர் யுவதிகளுக்கு கொடுப்பனவு!

ஜப்பானில் இடைக்கால தொழில்நுட்ப சேவை பயிற்சி நிமித்தம் சென்று மூன்று வருடம் பணியாற்றி திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக தலா 6 ஜப்பான் யென் (சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம்) வழங்கப்பட்டது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 15 இளைஞர் யுவதிகளுக்கு 16.4 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

ஜப்பானில் பணியுடன் கூடிய பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் குறித்த தொகை அவ்வூழியர்களுடைய கணக்கில் சேமிக்கப்பட்டிருந்ததுடன் 3 வருடங்களின் பின்னர் அவர்கள் நாடு திரும்பியதும் அப்பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

.ஜப்பான் தொழில்நுட்ப சேவைத் திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் IM ஜப்பான் நிறுவனம்ஆகியவற்றின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகிறது.

காசோலை வழங்கும் நிகழ்வில் பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, IM ஜப்பான் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் எச் கவஹாரா, பணியக பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image