வௌிநாட்டுத் தொழில்வாய்ப்பு மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமா?

வௌிநாட்டுத் தொழில்வாய்ப்பு மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமா?

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தாமதப்படுத்தினால் உடனடியாக தம்மிடம் முறைப்பாடுகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக SLFEB பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வெளிநாட்டு முகவர் நிறுவனமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்தால், மூன்று மாதங்களுக்குள் அது வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாவிடின் முறைப்பாடு செய்ய பொது மக்களுக்கு அதிகாரம் உண்டு என்று மங்கள ரந்தெனிய டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்திருந்தாலும், அவசரமாக நிரப்ப வேண்டிய தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்கான கோட்டாவைப் பெறாமல் பதிவு இலக்கத்தை மாத்திரம் காட்சிப்படுத்தி தாம் நேர்மையானவர்கள் என்று நிரூபிக்க முயல்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போலி முகவர் நிலையங்கள் மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று தமது பெயரில் நிரந்தர வைப்பில் வைக்கின்றனர். அல்லது முதலீடு செய்கின்றனர். அவர்களிடம் பதிவு செய்துகொண்டவர்கள் சுமார் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியேற்படுகிறது. கொவிட் தொற்றுக்குப் பிறகு இந்நிலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, மக்கள் வௌிநாட்டுத் வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை தொழில் வாய்ப்புக்காக நாடும்போது அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அந்நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டவையா இல்லையா என்பதை ஏமாற முதல் தௌிவாக தேடியறிந்துகொள்ள வேண்டும் என்றும் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image