பிரியந்த குமாரவின் சம்பளம் மற்றும் நிதி மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பு

பிரியந்த குமாரவின் சம்பளம் மற்றும் நிதி மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பு

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சியல்கோட் நகரில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சம்பளம் மற்றும் நிதி அவருடைய மனைவியின் வங்கிக் கணக்கிலிடப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான முதலாவது சம்பளம் மற்றும் சியல்கோட் பிரதேச வர்த்த சமூகத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி ஆகியன பிரியந்தவின் மனைவியின் கணக்கிலிடப்பட்டுள்ளது என்று  பாக் பிரதமரின் அரசியல் உரையாடல்களுக்கான விசேட உதவியாளர் டொக்டர் ஷஹ்பாஸ் கில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பிரியந்த குமார பணியாற்றிய ராஜ்கோட் எண்டர்பிரைஸஸ் நிறுவனத்தினால் மாதச் சம்பளம் 1,667 அமெரிக்க டொலர் மனைவியின் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என பாக் பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். அத்துடன் பிரியந்த குமாரவின் குடும்பத்துக்காக சேகரிக்கப்பட்ட 100,000 அமெரிக்க டொலர் நிதியும் அவருடைய விதவை மனைவியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பாக் பிரதமர் டிவிட் செய்துள்ளார்.

சியல்கோட் பிரதேச வர்த்தக சமூகம் நிதி சேகரித்து பிரியந்த குமாரவின் மனைவியின் கணக்கிற்கு வைப்பிலிட்டமை மற்றும் ராஜ்கோட் எண்டர்பிரைஸஸ் நிறுவனம் சம்பளம் வழங்கியமைக்கு ஆகியவற்றுக்கு பிரதமர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image