சர்வதேச விமானங்கள் பஹ்ரைனுக்குள் நுழைய புதிய வழிகாட்டி!
மீண்டும் பல நாடுகளில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான புதிய வழிகாட்டியினை பஹ்ரைன் அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
ஜனவரி 9ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இப்புதிய வழிகாட்டல்கள் வௌியாகியுள்ளன.
புதிய உள்நுழைவு சுகாதார வழிகாட்டல்கள்களுக்கமைவாக, முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றும் , சமீபத்தில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த வௌிநாட்டுப் பயணிகள் நாட்டுக்குள் நுழைய 72 மணிக்கு முன்பதாக எடுக்கப்பட்ட, எதிர்மறையான QR குறியீடு கொண்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பஹ்ரைனுக்குள் நுழைந்தவுடன் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள். இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 14 நாட்கள் பூர்த்தியடைந்தவர்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் பஹ்ரைன் பரஸ்பர தடுப்பூசி அங்கீகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளால் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பஹ்ரைன் அறிவித்துள்ளது.